ஒமிக்ரான் தொற்று பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 40 ற்கும் மேற்பட்ட நாடுகளுளில் பரவியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஒமிக்ரான் தொற்று பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.