சென்னை எழுப்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான ஹாக்கி தொடரில் பொம்மன் இலச்சினை பயன்படுத்தப்பட்டது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார் .
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் சென்னை எழுப்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று நடைபெற்று வருகிறது .
இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் தொடர் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த தொடரில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் கடைசி லீக் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.
அனல் பறக்க நடைபெற்ற இந்த போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை கெத்தாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்நிலையில் கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த ஹாக்கி தொடரில் இலச்சினையாக வடிவமைக்கப்பட்டுள்ள “பொம்மன்” எனும் யானையின் சின்னம் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இலச்சினை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் .
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிருப்பதாவது:
முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் – பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக #AsianChampionshipTrophyChennai ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு “பொம்மன்” என பெயர் சூட்டினோம்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் – பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம் என தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .