தமிழ் சினிமாவில் உச்சம் தோட்ட பல இயக்குநர்களுக்கு மத்தியில் வெறும் மூன்று படங்களை மட்டும் இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் இயக்குநர் மாரி செல்வராஜ் . இவரது எழுத்துக்கும் படத்தின் சில உருக்கமான காட்சிகளுக்கும் கண்கலங்காத ஆட்களே இருக்க முடியாது .
அந்தவகையில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நவரச நாயகி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த மாதம் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.
விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்க்கிடையே வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள மாமன்னன் திரைப்படம் . உதயநிதியின் திரைப்பயணத்தில் இதுவரை கண்டிராத வசூல் சாதனையை மாமன்னன் நிகழ்த்தியுள்ளது .
இந்நிலையில் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ள மாமன்னன் படத்தை கொண்டாடிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி கூறிருப்பதாவது :
நீங்கள் கொடுத்த அன்பாலும் வரவேற்பாலும் மாமன்னன் மெகா பிளாக்பஸ்டர் படமாக உருவெடுள்ளது ரசிகர்களுக்கும் , மாரி செல்வராஜுக்கும் , இசைப்புயலுக்கும் ,வைகை புயலுக்கும் , கீர்த்தி சுரேஷுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார் .
இதேபோல் இயக்குநர் மாரிசெல்வராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது :
எல்லாருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும் என அவரது பாணியில் சிம்பிளாக தெரிவித்துள்ளார் .