11 ஆம் வகுப்பு மாணவன் மேயர் பிரியாவை ஒரு முறை பார்க்கணும் சார் என்று கேட்க, அதனை உடனடியாக அமைச்சர் உதயநிதி(Udhayanidhi Stalin )மேயர் ப்ரியாவை அறிமுகப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்.கே.தி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 11 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன், செஞ்சி மஸ்தான்,மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் அரசின் சார்பாக 5 லட்சம் மாணவர்களுக்கு 234 கோடி செலவில் மாணவ மாணவர்களுக்கு மிதிவண்டிவண்டிகளை வழங்கினார்.
அப்போது 11 ஆம் வகுப்பு மாணவன் அமைச்சர் உதயநிதியிடம்(Udhayanidhi Stalin) மேயர் பிரியா அவர்களை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.அதற்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவனின் முதுகில் தட்டி கொடுத்து அறிமுகப்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் மாணவர்கள் ,அமைச்சர்கள் ,நிர்வாகிகள் என மேடையில் புடைபடம் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து நிகச்சிக்கு வந்த அமைச்சர் பிரியாவை மாணவனுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த மாணவன் அழைத்து ”நீ கேட்டியே.. இதோ வந்துட்டாங்க பாரு என சொல்ல..மேடம் உங்களை பார்க்கனும் ரொம்ப நாள் ஆசை என்று அந்த மாணவன் சொல்ல அதற்கு மேயர் பிரியா சந்தோஷத்தில் மாணவனின் கைகுலுக்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்பொழுது இந்த வீடியோ காட்சிகள் தான் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.