பேரிடர் நிவாரண நிதி தொடர்பான சமீபத்திய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதியின் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும்.
அவுங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்கிற மாதிரி எல்லாம் பேசுகிறவர்கள்.. அவுங்க அப்பன் வீட்டு சோற்றை வைத்துக் கொண்டு இன்றைக்கு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா அப்படின்னு கேட்க முடியுமா?” என கடுமையாக சாடினார்.
இந்நிலையில், இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, “மத்திய அரசிடம் பேரிடருக்கான நிதியை மட்டுமே கேட்டேன். தவறான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை. ‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? மரியாதைக் குறைவான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை.
பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியே மிகப்பெரிய பேரிடர் என்பதால் இதை தனியாக ஒரு பேரிடராக பார்க்க மாட்டோம் என்ற எண்ணத்தில் கூறியிருப்பார்கள் என சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பார்த்தேன். வார்த்தைக்கு வார்த்தை பேசி நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி அரசியலாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.