அடுத்தாண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு வரலாற்றில் முதல் முறையாக உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
டி20 உலகக்கோப்பைக்கான ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்றில் உகாண்டா தனது கடைசி ஆட்டத்தில் ருவாண்டாவுக்கு எதிராக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இடத்தை உறுதி செய்தது.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடான ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய இரண்டையும் தாண்டி டி20 உலகக்கோப்பையில் உகாண்டா தனது இடத்தை உறுதி செய்து, 20வது அணியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
முன்னதாக, ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் நமீபியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று, ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.