”கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பிரதமர் ,அதானி தான்..” ஜோதிமணி MP பரபர குற்றச்சாட்டு!!

Spread the love

அமலாக்கத்துறை கொள்ளைக்கு மத்திய பா.ஜ.க அரசு உடந்தையாக இருப்பதாக ஜோதிமணி எம்.பி(Jothimani MP) குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி எம்.பி, “பா.ஜ.கவின் கூட்டாளிகள் தான் அமலாக்கத்துறை ,வருமானவரி துறை , மத்திய புலனாய்வுப் பணியகம் அடிக்கும் பகல் கொள்ளையில் இவர்களின் கூட்டாளியான பா.ஜ.கவுக்கு எவ்வளவு பங்கு?.

இதுவரை லஞ்சம் வாங்கிய ED அதிகாரிகள் மீது பா.ஜ.க அரசு என்ன‌ நடவடிக்கை எடுத்துள்ளது. ED பாஜகவின் கூட்டாளியாகதான் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில்,லஞ்சம் வாங்கியதாகக் கடந்த மாதம் ராஜஸ்தானில் ED அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி நேற்று பிடிபட்டுள்ளார்.

இந்தியாவில் யாராவது கருப்புப் பணம் வைத்துள்ளார்கள் என்றால் அது நரேந்திர மோடி தலைமையில் இருக்கும் பாஜகவும், இவர்களது கூட்டாளி அதானியிடமும் தான் இருக்கும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.


Spread the love
Related Posts