சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் பண்டிகை கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்களின் மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டி அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில், கரௌலியில், ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு இளைஞர் ஒருவர் தனது சகோதரிகள் பெயரில் நிலவில் நிலம் வாங்கி, அதை சகோதரிகள் இருவருக்கும் பரிசாக அளித்துள்ளது விநோதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கரௌலியைச் சேர்ந்தவர் தருண் அகர்வால். இவருக்கு பிரியங்கா மற்றும் சோனியா அகர்வால் என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்த நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, தனது இரண்டு சகோதரிகளுக்காக நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.
இது குறித்து தருண் அகர்வால் கூறுகையில்,அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிலவு நில ஆணையத்திடம் நிலவில் நிலம் வாங்க அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிலவு நில ஆணையத்திடம் விண்ணப்பித்ததாக தருண் கூறினார்.
நிலவில் நிலம் வாங்க சுமார் $150 செலவாகும் என்கிறார் . மேலும் இந்த பரிசு எனது சகோதரிகளுக்கு மிகவும் விலையுயர்ந்த, மறக்கமுடியாத மற்றும் தனித்துவமானதாக இருக்கும். நிலவில் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவாகும், அதை எனது சகோதரிகளுக்கு ரக்ஷாபந்தன் பண்டிகையின்போது வழங்கியதன் மூலம் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
(மேலும் இந்த சம்பவம் வட இந்தியாவில் செய்தி தாளில் வெளியானது குறிப்பிடதக்கது)