Unlucky day : பொதுவாக ஒருவரின் பிறந்த மாதத்தின் அடிப்படையில் சில தேதிகள் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இது பல தலைமுறையாக பலரும் நம்பக்கூடிய ஒரு கருத்தாக உள்ளது.
அந்த வகையில், உங்கள் பிறந்த மாதத்துடன் தொடர்புடைய துரதிர்ஷ்டமான தேதிகள் (Unlucky day) பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜனவரி :
பொதுவாக ஜனவரி மாதம் புதிய தொடக்கங்களுடன் தொடர்புடையது என்றாலும் நீங்கள் ஜனவரி மாதம் 4 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் அது அசுபமானது என்று கூறப்படுகிறது.
மேலும், ஜனவரி 4ல் எடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் வீணாகின்றன. 13 ஆம் தேதி பொதுவாக அதிர்ஷ்டமற்றதாக கருதப்படுகிறது.
பிப்ரவரி :
லீப் ஆண்டுகளில் மட்டுமே நிகழும் பிப்ரவரி 29, அரிதாக இருப்பதால் துரதிர்ஷ்டவசமான நாளாகக் கருதப்படுகிறது.
மார்ச் :
மார்ச் மாதத்தில் 15 ஆம் தேதி நீங்கள் பிறந்திருந்தால், கவனமுடன் தான் இருக்க வேண்டும். இந்த மாதம் 15 ஆம் தேதி ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட்ட நாள்.
ஏப்ரல் :
ஏப்ரல் 1 ஏப்ரல் முட்டாள்கள் தினம். எனவே இந்த தினத்தில் பிறந்த சிலருக்கு சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமான நாளாக மாறிவிடும். எனவே ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
இதையும் படிங்க : https://itamiltv.com/property-33-per-cent-hike-in-guide-value-for-property-is-not-justified-gk-vasan-statement-issued-tamil-nadu/
மே :
மே மாதம் உங்கள் பிறந்த மாதம் மே என்றால், நீங்கள் 5 மற்றும் 20 ஆம் தேதிகளில் கவனமாக இருக்க வேண்டும்.
5 என்ற எண் பெரும்பாலும் மாற்றம் மற்றும் கணிக்க முடியாத தன்மையுடன் தொடர்புடையது மற்றும் 20 சில நேரங்களில் விபத்துகளுக்கு ஆளாகக்கூடிய நாள் என்று கூறப்படுகிறது.
ஜூன் :
ஜூன் மாதத்தில் 6ஆம் தேதி பிறந்தவர்களுக்கு 6ஐச் சுற்றியுள்ள மூடநம்பிக்கை இந்த தேதியை துரதிர்ஷ்டவசமாக கருதுவதற்கு காரணமாக உள்ளது.
ஜூலை :
ஜூலை மாதம் உங்கள் பிறந்த மாதம் என்றால், நீங்கள் 7 மற்றும் 27 ஆம் தேதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
27-ம் தேதி விபத்துகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாக நம்புகின்றனர்.
ஆகஸ்ட் :
ஆகஸ்ட் மாதம் 8 மற்றும் 24 தேதிகள் பல்வேறு நம்பிக்கைகளின் காரணமாக சிலரால் அதிர்ஷ்டம் குறைவாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் :
இந்த மாதம் விபத்துகள் ஏற்படக்கூடிய தேதி என்று கூறப்படுவதால் செப்டம்பர் 9 அன்று பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745721528325664984?s=20
அக்டோபர் :
இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு 13ம் தேதி என்பது பெரும்பாலும் துரதிர்ஷ்டவசமான நாள் என்று கூறப்படுகிறது. அதாவது, இது ஹாலோவீனுடன் தொடர்பில் இருப்பதால் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.
நவம்பர் :
உங்கள் பிறந்த மாதம் நவம்பர் என்றால், 5ஆம் தேதி சில சிக்கல்களை எழுப்பலாம். இது சதித்திட்டங்கள் மற்றும் ஆபத்துகளுடன் தொடர்புடைய தேதியாகும்.
டிசம்பர் :
கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்பட்டாலும், இந்த நாளில் மன அழுத்தம் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளும் ஏற்படலாம். எனவே, டிசம்பர் 25 அன்று பிறந்தவர்கள் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.