ரத்தவெள்ளத்தில் கிடந்த வழக்கறிஞர்.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொடூரம்..!

உத்தரபிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்யப்படுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வழக்கறிஞர் பெயர், பூபேந்திர சிங். அவர் நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அருகில் நாட்டுத் துப்பாக்கி கிடந்தது.

வழக்கறிஞர் பூபேந்தர் சிங் அந்த தளத்தில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாகவும், திடீரென பலத்த சத்தம் கேட்டபிறகு அவர் தரையில் விழுந்தாகவும் கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஆனந்த் கூறுகையில், ‘வழக்கறிஞர் பூபேந்திர தனியாக இருந்ததாகத் தெரிகிறது. சம்பவம் நடந்தபோது அவரை சுற்றி வேறு யாரும் காணப்படவில்லை. தடயவியல் குழு தடயங்களை சேகரித்து ஆய்வு செய்கிறது. கொலைக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் தெளிவாக தெரியவில்லை’ என்றார்.

 

Total
0
Shares
Related Posts