இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்தியாவிற்கு பெண்கள் தனியாக பயணிக்கவேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ள அறிக்கையில்;
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொது இடங்கள் மட்டுமல்லாது, சுற்றுலாத்தளங்களிலும் பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறிவருவதாகவும், எனவே இந்தியாவிற்கு செல்லும் பெண்கள் தனியாக பயணிக்க வேண்டாம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆர்டிக்கிள் 370 அமல்படுத்தப்பட்டபோது, இந்தியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதால் பெண்களை தனியாக பயணிக்கவேண்டாம் என கூறியிருப்பது, இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.