மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ஆட்சிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ,அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமின் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது.
இந்நிலையில், குடும்பத்தினர் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க உத்தவ் தாக்கரேவின் மனைவி மூலம் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.