NEET : நீட் தேர்வால் கூலித்தொழிலாலியின் மகனான பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மற்றும் இவரது மனைவி சாந்தி.
விவசாய கூலித்தொழிலாளர்களான இவர்களது இரண்டாவது மகன் தனுஷ் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
இதையும் படிங்க : “தி கோட்” ட்ரெய்லர் எப்படி இருக்கு?
தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு வட மாநிலங்களிலும் எதிரொலிக்க தொடங்கிய நிலையில், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன.
உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.