கலைஞர் திருமகள் கவிஞர் முதலமைச்சரின் தங்கை பகுத்தறிவாளர் என்ற பிறவிப் பெருமைகளைத் தாண்டி மாதர் குலத்துக்கு
மகுடம் என்றுதான் இந்திய அரசியல் இதைக் கணக்கிட்டுக் களிக்கும் என்று கவிதை நடையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி நியமிக்கபட்டதற்க்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவிதுள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் 2-வது முறையாக களம் கண்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மொத்தம் 5,40,729 வாக்குகள் கிடைத்துள்ளன.
மேலும் ,இந்த வெற்றி மூலம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்ற முதல் எம்பி என்ற பெருமையை கனிமொழி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி எம்.பி நியமிக்கபட்டதற்க்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவிதுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”
ஒரு பெரும் பெருமை
வாய்த்திருக்கிறது
கனிமொழி கருணாநிதிக்கு
நாடாளுமன்றங்களின்
குழுத் தலைவராய்
தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது
கலைஞர் திருமகள்
கவிஞர்
முதலமைச்சரின் தங்கை
பகுத்தறிவாளர் என்ற
பிறவிப் பெருமைகளைத் தாண்டி
மாதர் குலத்துக்கு
மகுடம் என்றுதான்
இந்திய அரசியல் இதைக்
கணக்கிட்டுக் களிக்கும்
கனிமொழியின்
பதின் பருவத்தில்
கலைஞர்தான் எனக்கு
அறிமுகம் செய்தார்
காற்றோடு உரையாடும்
பூவைப்போன்ற மென்மையும்
கல்லுறுதி போன்ற
சொல்லுறுதியும்
சிங்கத்தின் இருதயமும்
கனிமொழியின் தீராத குணங்கள்
கனிமொழியை
அமைச்சராக்கவில்லையா
என்று கலைஞரை
ஒருமுறை கேட்டேன்
‘காலம் வரட்டும்’ என்றார்
இப்போது ஒருகாலம்
அருகில் வந்து
நழுவியிருக்கிறது
ஐந்தாண்டுகளில் ஆகலாம்
அல்லது
அதற்கு முன்பேகூடக்
காலம் ‘கை’சேரலாம்
கனவு மெய்ப்பட
வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.