Valentine’s Day 2024
காதலர் தினத்தில் காதலை சொல்லலாமா? வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் இளசுகளே… காதல் பிரிவால் தாடியுடனுன் சுத்திக் கொண்டிருக்கும் வாலிப வயோதிகர்களே.. இந்த கன்டென்டை படிக்கும் ஐ தமிழ் நேயர்களே…
இந்த ஆண்டு ‘லவ்வர்ஸ் டே’க்கு ரெட் ரோசோடு போய் உங்க பாட்னரை மீட் பண்ணுங்க.. கண்டிப்பா ஓகே ஆகிடும்!
பொதுவாக ரோஜாவில் எத்தனையோ வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை வெளிப்படுத்துகிறது.
அதோடு சேர்த்து கிரகங்களின் கூட்டணியும், காதல் கிரகங்களின் சேர்க்கையும் புது காதலை உருவாக்கவும் செய்யும், பிரிந்த காதலர்களை சேர்த்தும் வைத்துவிடும்.
இதையும் பிடிங்க : காவிரி நீரை முழுமையாகப் பெற முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக – இபிஎஸ் கண்டனம்!
இந்த ஆண்டு (Valentine’s Day 2024) காதலர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 7ஆம் தேதி ரோஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. எந்த நிற ரோஜாவை வாங்கிக் கொடுத்தால் காதல் கைகூடும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை இளசுகளுக்கு தினம் தினம் திருவிழாவாக தான் இருக்கும். காதலர் தினத்தை கொண்டாடி தீர்ப்பார்கள்.
உலகம் முழுவதிலும் காதலர் தினத்திற்காக பலகோடி ரோஜாப் பூக்கள் விற்பனையாகின்றன. சரி, ரோஜாவை மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்? காதலர் தினத்திற்கும் ரோஜாவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
இதையும் பிடிங்க : Physical Education-உடற்கல்வி ஆசிரியர் பணி.. நேர்காணல் – முழு விவரம் உள்ளே!
உலகத்தில் உள்ள பெண்களின் அழகிற்கும், ரோஜா பூக்களின் அழகிற்கும் காரகர் சுக்கிர பகவான். அதுமட்டுமல்லாமல் குளிர்ச்சி, மகிழ்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிர பகவான் தான்.
எனவே தான் வெற்றியாளர்கள் தொடங்கி நோயுற்றவர்கள் வரை அனைவருக்கும் ரோஜாப் பூங்கொத்து கொடுக்கிறோம்.
இதையும் பிடிங்க : திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் இன்று சுற்றுப்பயணம்!
முக்கியமாக பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா உள்ளது. எனவே தான் காதலர் தினத்தில் சிவப்பு ரோஜாவுக்கு மவுசு அதிகம்.
பிறகு என்ன..ரோஸ் டே அன்று எங்க இருந்தாலும் சிவப்பு ரோஜாவை அள்ளிக் கொண்டு போய் உங்கள் காதல் துணையிடம் கொடுத்து மனதில் நீங்காத இடம் பிடியுங்கள்.