பாஜக கட்சியின் சின்னமான தாமரை, பிரதமர் நரேந்திர மோடி, ஜே பி நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை ,சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் (vanathisrinivasan) ஆகியோர் உள்ளிட்ட பிளக்ஸ் பேனரை பாஜகவினர் பள்ளி வளாகத்திற்குள் வைத்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாரதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக பாஜக கட்சியின் சின்னமான தாமரை ,பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, தமிழக மாநில அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் (vanathisrinivasan) உள்ளிட்ட புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை வைத்ததால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வலியுறுத்துதலை அடுத்து அப்பள்ளி மாணவர்கள் பிளக்ஸ் பேனரை மறைவான இடத்திற்கு எடுத்துச் சென்று வைத்தனர்.
பின்னர் பாஜகவினர் அந்த பிளக்கப் பேனரை எடுத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் எடுத்துக் சென்று வைத்தனர். அதேபோல் பள்ளி வளாகம் முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாரதி சீனிவாசனை வரவேற்கும் விதமாக அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்து வரவேற்றன.
அப்பொழுது வெடிக்காத பட்டாசு ஒன்று வானதி சீனிவாசனின் காலுக்கு கீழ் வெடித்ததால் வானதி அதிர்ச்சியடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.