வானதி ஸ்ரீனிவாசன் | கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில் பாஜகவின் மையக்குழு கூட்டமும் இன்று காலை சென்னை டி. நகரில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொள்வதற்காக வந்த பா.ஜ.க. மகளிரணி தேசிய தலைவியும், தேசிய தேர்தல் குழு உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “ வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் யார் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து ஜனநாயக ரீதியில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அடங்கிய கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தின் முடிவில் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் மாநில தலைமையின் மூலமாக 2 நிர்வாகிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: ”பிரதமர் வருகை..” சென்னை மக்களே Take Diversion!
அதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தலைவர்கள் பங்கு பெறுவார்கள். அந்தக் குழுவானது உத்தேசப் பட்டியலுடன் வரும் 6 ஆம் தேதி தேசிய தலைமையை சந்திக்க உள்ளது. தவிர, தற்போது தேசிய தலைமையால் வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழகம் இடம்பெறாததால், ‘தமிழகத்திற்கு மட்டும் தாமதமா?’ என்றால் கிடையாது. கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு அரசியல் கட்சியாக அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் எங்களுடைய பணிகள் இருக்கின்றன” என்ற அவர், “பா.ஜ.க. சார்பாக போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்படுமா?” என்ற கேள்விக்கும்,
இதையும் படிங்க:BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு – அமலாக்கத்துறை பதில் மனு
“அதனால்தான் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறதே?” என்ற கேள்விக்கும் பதிலளித்து பேசும் போது, “கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும், அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். எங்களுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. நாங்கள் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களும் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
வரருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிக்கூட்டணி அமைத்து போட்டியிட தயாரான போதே அதனுடன் கூட்டணியில் உள்ளதாக அறிவித்த முதல் அணி ஓ.பி.எஸ். அணிதான். ஆனால், தற்போது பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் பா.ஜ.க., அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பி.எஸ்.சுடன் வெளிப்படையான பேச்சு வார்த்தையை துவங்காததற்கு காரணமே ஓ.பி.எஸ். அணியினரை தாமரை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதுதான் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் வானதி சீனிவாசனின் சூசகமான இந்த பேச்சு ஓ.பி.எஸ். அணியினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகிறது.