ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வன்னியர் சங்கம் சூரியாவுக்கு அனுப்பிய நோட்டிஸ்!

vanniyar-sangam-notice-to-actor-surya-in-jaibhim-issue
vanniyar sangam notice to actor surya in jaibhim issue

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் ஒடிடியில் வெளியாகியது. பலராலும் பாராட்டுகளை பெற்ற இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்ததை அடுத்து அந்த காட்சிகள் மாற்றப்பட்டன.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் , சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

vanniyar-sangam-notice-to-actor-surya-in-jaibhim-issue
vanniyar sangam notice to actor surya in jaibhim issue

அதில், வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts