தமிழ்நாடு தனியார் சுயநிதி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி நலக் கூட்டமைப்பு சார்பில் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதற்காக மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தி விட்டு தற்பொழுது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கட்டாயக் கல்வித் திட்டத்தில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டாய கல்வி திட்டத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் போது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் BRT ஒருவர் கலந்து சரியான முறையில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
கட்டாய கல்வி திட்டத்தில் சேர்க்கைக்கான நெறிமுறை வழிபடுதல் கூட்டம் நடைபெறும் பொழுது அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் பள்ளி தாளாளர்கள் தலைமை ஆசிரியர்களை அழைத்து நெறிப்படுத்துதல் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
கட்டாய கல்வி திட்டத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பொழுது வெவ்வேறு பள்ளிகளில் விண்ணப்பத்தில் இருந்தால் குலுக்களில் முன்னமே தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை நீக்கிவிட்டு மீதம் உள்ளவர்களுக்கு குழுக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.