kn nehru vs thiruma | வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் 23 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கவும், மீதமுள்ள 17 தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது திமுக.
தற்போது வரை, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 வீதம் 4 தொகுதிகளும், கொமதேக மற்றும் முல்லீம் லீக் ஆகியவற்றிற்கு தலா 1 ஒரு தொகுதி வீதம் 2 தொகுதிகளும், ஆக மொத்தம் 6 தொகுதிகள் மட்டுமே திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதன் முக்கிய கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகியவற்றுடனும், புதிதாக கூட்டணியில் சேர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் சீட் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தவிர, அந்த கட்சிகள் “கட்டாயம் வேண்டும்” என கோரிக்கை வைக்கும் தொகுதிகளை அவர்களின் விருப்பப்படி ஒதுக்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு அந்த இரண்டிலுமே வெற்றி பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனித்தொகுதிகளோடு ஒரு பொதுத்தொகுதியும் வேண்டும் என முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக, “மத்திய மாவட்டத்தில் ஒரு தொகுதி தனது கட்சிக்கு கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்” எனவும் திமுகவிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், திமுக அதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதமும் ஏற்பட்டது. அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி அவருடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார் திருமாவளவன்.
தற்போது, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு இன்று காலை 10.30 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை செய்தார் திருமாவளவன்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1765986016379461705?s=20
எனவே, திமுக – விசிக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என நம்பப்படும் நிலையில், “முதல்வர் ஸ்டாலினை திருமா சந்திக்க இதுதான் முக்கிய காரணம்” என வெளியாகி இருக்கும் தகவல்கள் மூத்த அமைச்சர் கே.என்.நேரு தரப்பை சூடாக்கி விட்டதாக கூறுகின்றன அறிவாலய தகவல்கள் (kn nehru vs thiruma)
அதாவது, ஏற்கனவே தனக்கு ஒதுக்கப்பட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனித்தொகுதிகளோடு பெரம்பலூர் பொதுத்தொகுதியையும் தனக்கு ஒதுக்குமாறு திருமா கேட்டதாகவும், அதுதான் அமைச்சர் நேரு தரப்பை சூடாக்கியதாகவும் கூறுகிறது திமுக வட்டாரம்.
தனது மகன் அருன் நேருவுக்காக கடந்த சுமார் 2 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதியை நோட்டமிட்டு வரும் அமைச்சர் நேருவுக்கு கோபம் வராதா என்ன..?