மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகை லலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
1960ம் ஆண்டுகளில் நாடகங்களில் நடித்து வந்த மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகை லலிதா, 1970ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கூட்டுக்குடும்பம் என்ற படத்தில் அறிமுகமானார்.
கமல் – சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியான நடிகை லலிதா தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர மலையாள சினிமா துறையினரால் மகேஸ்வரி அம்மா என அழைக்கப்படும் லதா 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1990ம் ஆண்டு அமரம் படத்துக்காகவும், 2,000மாவது ஆண்டில் சந்தம் படத்துக்காகவும் தேசிய விருது பெற்ற இவர் 4 முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகையான லலிதா உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், கொச்சியில் உள்ள தனது மகன் சித்தார்த் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் காலமானார்.
லலிதாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகையான லலிதாவின் மறைவிற்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவத்து வருகின்றனர்.
இவரின் கணவரான இயக்குனர் பரதன் கடந்த 1998ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த இவருக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சித்தார்த் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார்.