பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நல குறைவால் மும்பை மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானார். அவரது மறைவுச் செய்தியை மருத்துவமனை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.
பாப்பி டா என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், டிஸ்கோ டான்சர், ஹிம்மத்வாலா, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ் ஜெயதே, கமாண்டோ, தானேதார், உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பப்பி லஹரி இசையமைத்துள்ளார்.
தமிழில் பாடும் வானம் பாடி படத்தின் மூலம் பிரபலமான இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்ட பப்பி லஹரி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து மீண்டாலும் நோய்களால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக பப்பி லஹிரி ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கட்கிழமையன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நிலையில் இன்று நள்ளிரவுக்கு மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்தார்.
இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.