விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் “பீஸ்ட்” . சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹேக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறாதாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் கடந்த கால இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டதாலும் மீண்டும் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்காகவும், கொரோனா பரவல் ஏதும் மீண்டும் வந்துவிட கூடாது என்பதாலும், இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.