விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ட்ரெயின் என்ற புதிய படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறிவிடுபவர் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என ஹிட் படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்புத் திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாகிய நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேட்ட, மாஸ்டர், விக்ரம் என வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இனிமேல் வில்லனாக நடிக்கப்போவதில்லை என விஜய் சேதுபதி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்தி உள்ளார். இந்த படத்தில் பூஜை இன்று நடைபெற்றது.

விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இதற்கு மிஷ்கினே இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது, ‘ட்ரெயின்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் கணேஷ் வெங்கட்ராமன், செல்வா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படம் ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது.