விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் வெற்றிபெற்ற பிறகு அந்த தொகுதியிலேயே (Vijayaprabhakaran) அவரது திருமணம் நடைபெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது . இதில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார் .
இந்நினையில் விஜய பிரபாகரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் விஜய பிரபாகரனின் அம்மாவுமான பிரேமலதா விஜயகாந்த், இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் கூறியதாவது :
மதுரை வரும்போதெல்லாம் கேப்டனுடன்தான் வந்துள்ளேன். கேப்டன் இல்லாமல் தற்போது வந்து உங்களை சந்திக்கும் பொழுது மனமெல்லாம் துக்கம் அடைக்கிறது.
Also Read : https://itamiltv.com/corruption-in-all-departments-under-dmk-regime-edappadi/
கணவன் இல்லை என்றால் அந்த பெண் எவ்வளவு பிரச்னைகளை சமாளிப்பார் என்று தாய்மார்களுக்கு தெரியும். சமூகத்தில் எவ்வளவு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
கேப்டன் மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் . அவர் விட்டுச்சென்ற பணிகளை உங்களுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் என் மகனை உங்களுக்காக போட்டியிட வைத்துள்ளேன்.
கேப்டன் விஜயகாந்த் விருத்தாசலத்தில் எப்படி முதல் வெற்றி பெற்றாரோ, அதே போல் விஜய பிரபாகரனுக்கு இந்த விருதுநகர் தொகுதி வெற்றியை தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் (Vijayaprabhakaran) ஆசிர்வாதத்துடன்தான் தான் நடக்கும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.