nilgris | நீலகிரி அருகே ஊருக்குள் வரும் காட்டுயானைனை விரட்டி அடிக்க ஊர் பொது மக்கள் மதுபாட்டில்களை கொண்டு தோரணம் கட்டியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் உணவு, தண்ணீர் தேடி கொண்டு ஊருக்குள் வருகின்றது .
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்துள்ளனர்.தொடர்ந்து வனத்துறையினரும் யானையை விரட்டும் பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வந்தும்,காட்டுயானைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
மேலும்,பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதியிலும் இப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் யானையை விரட்டும் நோக்கில் ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: “மீண்டும் மீண்டுமா..?”முதல் வேட்பாளரை பார்த்து அதிர்ச்சியில் திமுகவினர்!
அப்பகுதியில், குடித்து விட்டு கீழே கிடக்கும் மதுபாட்டில்களை எடுத்து யானைகள் அதிகம் வரும் பகுதிகளில் உள்ள மரங்களில் தோரணம் போல் கட்டியுள்ளனர்.
அவ்வாறு காட்டினால் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வரும் பொழுது, பாட்டிகள் அசைந்த வண்ணம் ஒன்றோடு ஒன்று மோதி,அதி இருந்து வரும் சத்தத்தால் யானைகள் பயந்து அப்பகுதிக்குள் வராது என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானைகளை விரட்டும் முயற்சியில் மக்களே ஈடுபட்டுள்ளனர்.