தற்போது கல்லூரியில் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடலூரில் தனியார் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி கடலூர் செம் மண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்ற காலை கல்லூரிக்கு வந்த மாணவி, கல்லூரியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று அங்கு துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து சக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ குறித்து அறிந்து விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பேக்கை சோதனையிட்டனர்.
அதில், கடிதம் ஒன்று சிக்கியதாகவும், அந்த கடிதத்தில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார், மாணவி தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.