குயிக் ஸ்டைல் என்ற நடனக் குழுவினருடன் விராட் கோலியின் நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் குவித்தார்.மேலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல சாதனைகளை படைத்தார். மேலும் இந்தப் போட்டி நேற்று டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்ததும், இந்திய வீரர் விராட் கோலி மும்பை திரும்பினார். மும்பையை அடைந்த பிறகு, அவர் நார்வேயை தளமாகக் கொண்ட குயிக் ஸ்டைல் என்ற நடனக் குழுவைச் சந்தித்தார்.
அப்போது Quick Style என்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து Ishq Ho Gaya என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.
Baar Baar Dekho என்ற படத்தில் இடம் பெற்றுள்ள Kala Chashma என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு மில்லியன் பார்வைகளையும் 5.4 லட்சம் லைக்குகளையும் குவித்துள்ளது.