விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் .
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
விருதுநகர்மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (15-12-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த திரு.சண்முகராஜ்என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் பாட்டாசு ஆலைகளில் தொடர் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்துவதுடன் முறையான பாதுகாப்புடன் பட்டாசு ஆலைகள் இயங்குகிறதா என்பதையம் உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.