firecracker accident-விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகே காமராஜ்புரத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் நாக்பூர் உரிமம் பெற்ற 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ,கடந்த 24-ம் தேதி காலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது பட்டாசுக்கு தேவையான வேதிபொருட்களை கலக்கும் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த 3 அறைகள் வெடி விபத்தில் தரைமட்டமாகின.
இதையும் படிங்க: Admk Flag-”எனக்கு மட்டும் தான் தடை.. தொண்டர்களுக்கு இல்ல..” -ஓபிஎஸ் அதிரடி!
மேலும் அந்த அறையில் வேலை பார்த்த கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த காளிராஜ் (23), முதலிபட்டியை சேர்ந்த வீரக்குமார் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த போர்மேன் சரவணக்குமார் (24), இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (17) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் கடந்த 25ம் தேதி சரவணக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூர்த்தி (17) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதன் மூலம் வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1751853619258003603?s=20
பட்டாசு ஆலை விபத்து குறித்து வச்சக்காரபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் அளித்து நிதியுதவி வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில்(24-01-2024) காலை எதிர்பாராதவிதமாக
ஏற்பட்ட வெடிவிபத்தில்(firecracker accident) இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,
அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.