பொறியியல், எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் வருகிற 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வரும் 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று முதல் TANCET இன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டான்செட் தேர்வு எழுத விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம்,
தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே 2 ஆம் தேதி அதற்கான இணையதளத்தில் வெளியிடப்படும்.