லிம்போமா லுகேமியா நோயால் சிகிச்சை பெற்று வந்த ஷிபாசி என்று அழைக்கப்படும் Cheems நேற்று காலை சிகிச்சையின் போதே உயிழந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெட்டிசன்களின் பொழுதுபோக்குக்காக எப்போதும் சமூக ஊடங்கங்களில் புது புது வீடியோக்கள், புகைப்படங்கள், மீம்கள், சினிமாக்கள் போன்றவை வைரலாகி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக மீம்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
அந்த வகையில் மீம்களில் மிக முக்கியமான கதாபாத்திரமான “டாகி மீம்” என்று அழைக்கப்படும்( Cheems) நாய் புகைப்படம் கொண்ட மீம்கள் தான். சமீப காலமாக சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டும், முக்கிய மீம் கன்டென்ட்டாக மாறியது.
இந்த நாய் புகைப்படம் கொண்ட மீம்களில் உலா வரும் நாயின் உண்மையான பெயர் கபோசு (Kabosu). ஜப்பானை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் 2010 ஆம் ஆண்டு கபோசுவை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்போது இதனுடைய மிக அழகான போஸ்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.
முன்னதாக ,Doge மீம்ஸின் நாயகன் 17 வயதான ஷிபா இனு கிறிஸ்துமஸ் தினத்தன்று சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்தியதாகவும் மேலும் கடுமையான சோலாங்கியோஹெபடைடிஸ் மற்றும் நாள்பட்ட லிம்போமா லுகேமியா நோயால் கண்டறியப்பட்டதாக நாயின் உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சோலாங்கியோஹெபடைடிஸ் மற்றும் நாள்பட்ட லிம்போமா லுகேமியா நோயால் ஷிபாசி கிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சையின் போதே இறந்துவிட்டது. இதற்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.