சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பலரும் பெரு மூச்சு விட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக இரவு பகல் பார்க்காமல் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய ஏரிகள் மளமளவென நிரப்ப ஆரம்பித்தன இதனால் ஊருக்குள் வெள்ளம் வெந்துவிடுமோ என அச்சம் இருந்து வந்த நிலையில் தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து சரிந்துள்ளது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் நீர்இருப்பு 2751 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 189 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
- சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 646 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 58 கனஅடியாக சரிவு
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 434 மில்லியன் கனஅடியாக உள்ளது
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5ஏரிகளில் 75.07% நீர் இருப்பு உள்ளன
- கடந்த சில தினங்களாக கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், தற்போது நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால் ஏரிக்கு நேற்று 189 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 116 கனஅடியாக சரிவு
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் சராசரியாக 75.07% நீர் இருப்பு உள்ளது
- 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.826 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் – 85.82%
புழல் – 83.36%
பூண்டி – 57.78%
சோழவரம் – 59.76%
கண்ணன்கோட்டை – 86.8%