இந்திய தயாரிப்பு மொபைல்களை(mobile phone) உலகம் பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி பிரகதி மைதானத்தில் 7வது இந்திய மொபைல் மாநாடு பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது.இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மற்றும் ஜியோ, ஏர்டெல் உள்பட இந்தியாவின் முன்னணி மொபைல் ஃபோன் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட 5000மேற்பட்ட தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 ‘5ஜி தொழில்நுட்ப ஆய்வகங்களை வழங்கினார்.பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தொழில்நுட்பம் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது.
எதிர்காலம் என்பது இங்கே இப்போது இருப்பது தான். 5ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்காக இந்த ஆய்வகங்கள் வழங்கப்படவில்லை. மாறாக, 6ஜி தொழில்நுட்பத்தில் நாம் முன்னணியில் திகழ வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய பிரதமர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை உலகம் பயன்படுத்துகிறது என தற்போது நாம் பெருமையாகக் கூறலாம்” எனத் தெரிவித்தார்.