கனமழையால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை சந்திக்க அரசு தயாராக உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததையடுத்து, மழை பாதிப்பு, நிவாரணப் பணிகளை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறிருப்பதாவது :
கனமழையால் தற்போது வரை மிகப்பெரிய பாதிப்பு எதுவும் நிகழவில்லை. எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை சந்திக்க அரசு தயாராக இருக்கிறது. தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read : திருவண்ணாமலை மகா தீபத்தை காண வரும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறை சிறப்பு நடவடிக்கை..!!
மழை வெள்ள பாதிப்புக்கு பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதி, போதுமானதாக இல்லை. தென் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி வழங்க ஊடங்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை, எங்களால் முடிந்தவரை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.