டெல்லி.. பஞ்சாபை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிப்போம் என அரவிந்த் கெஜ்ரிவால் சூளுரைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்;
டெல்லியில் இந்த வருடத்தில் மட்டும் 4 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும், முன்பெல்லாம் டெல்லியில் 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் இப்போது மக்கள் 24 மணி நேரமும் பூஜ்ஜிய கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர் என தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி என்னுடைய இடங்களுக்கு CBI மூலம் சோதனை நடத்தினார். அதிகாரிகள் எனது படுக்கையறை வரை நுழைந்தும், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் மூலம் பிரதமர் எனக்கு `இமந்தர்’(நேர்மை) என சான்றிதழ் அளித்துள்ளார். எங்களின் நேர்மையான அரசை டெல்லியில் அமைத்தோம்.. பிறகு பஞ்சாபில் அமைத்தோம்.. அடுத்ததாக கர்நாடகாவில் அமைக்கப்போகிறோம் என அரவிந்த் கெஜ்ரிவால்பேசினார்.