திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக மேயர்,துணை மேயரிடம் தாங்கள் ரப்பர் ஸ்டாம்ப் போன்று வந்து போவதாக திமுக கவுன்சிலர் (councillor)வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள்(councillor) கூட்டம் வழக்கம் போல் நடைபெற்றது. வந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் வரிசையாக தங்களது வார்டுகளில் இருக்கும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டனர்.அப்போது அந்த கூட்டத்தில் திடீரென ஆவேசமான இந்திராணி மாமன்ற கூட்டத்தில் பொங்கி எழுந்தார்.
கடந்த 15 மாதங்களாக மாமன்ற கூட்டத்திற்கு தாங்கள் ரப்பர் ஸ்டாம் போல வந்து உட்கார்ந்து விட்டுச் செல்கிறோம்.இதுவரை தங்கள் வார்டுகளில் எந்த வித பணிகளுக்கும் நடைபெறவில்லை .மேலும் மக்களைச் சந்திக்கும் நாங்கள் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை என்று கூட்டத்தில் அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் கவுன்சிலரின்(councillor) கேள்விக்குத் திண்டுக்கல் மேயர் பதில் சொல்ல முடியாமல் தவித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணை மேயர் உறுதி அளித்தார்.ஆனால் அதைக் கேட்டு சமாதானம் அடையாத கவுன்சிலர் இந்திராணி,
மாமன்றக் உறுப்பினர்களின் சுகாதாரத் துறைத் தலைவராக இருக்கும் நான் 48 வார்டுகளில் நடக்கக் கூடிய சுகாதாரத்துச் சீர்கேடு குறித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீண்டும் கேள்வி எழுப்பினர். மேலும் உறுப்பினரின் கேள்விக்குப் பதில் சொல்லத் திணறிய திண்டுக்கல் மேயர் துணை மேயர் கவுன்சிலரின் உரையை நிறுத்தி அமரும்படி உத்தரவிட்டனர்.
ஆனால் தனது உரையை நிறுத்தாத கவுன்சிலர் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தை ஒத்திவைத்து அங்கிருந்து சென்றார். மேலும் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.