இன்னும் ஒரே மாதத்தில் ஒரு சில குறிப்பிட்ட மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மொபைல் மாடல்களுக்கு சப்போர்ட்டை நிறுத்தும் முன்பு பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்வோம். எதன் சாப்ட்வேர் பழமையானது. எதைக் குறைந்த நபர்கள் பயன்படுத்துகின்றனர் ஆகியவற்றை ஆய்வு செய்தே இது குறித்து முடிவு செய்வோம். மேலும், இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வரும் அக்டோபர். 24 முதல் நெக்சஸ் 7, சாம்சங் கேலக்ஸி 2, ஹெச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா இசட், LG Optimus G Pro, சாம்சங் கேலக்ஸி S2, சாம்சங் கேலக்ஸி நெக்சஸ், ஹெச்டிசி சென்சேஷன், Motorola Droid Razr, சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம்,
சாம்சங் கேலக்ஸி டேப் 10.1, ஆசஸ் ஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர், ஏசர் ஐகோனியா டேப் A5003, சாம்சங் கேலக்ஸி எஸ், ஹெச்டிசி டிசையர் HD, LG Optimus 2X, சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க்3 மற்றும் ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு முந்தைய சாப்ட்வேரில் இயங்கும் எல்லா மொபைல்களிலும் வாட்எஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாம் பழைய மாடல்கள் என்பதால் பெரும்பாலான மக்களிடம் இந்த லிஸ்டில் இருக்கும் மொபைல் இருக்காது. ஒருவேளை, இந்த ஸிஸ்டில் உள்ள மொபைலை நீங்கள் இன்னும் பயன்படுத்தினால், அடுத்த மாதத்தில் இருந்து வாட்ஸ்அப்பை உங்களால் பயன்படுத்த முடியாது என்றும், தொடர்ந்து நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த மொபைலை அப்கிரேட் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.