ஸ்ரீ ரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் ஏன் தெற்கு நோக்கி படுத்துக்கொண்டிருக்கிறார் என்ற காரணம் தெரியுமா? இதுகுறித்த சுவாரஸ்ய வரலாற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
108 திவ்ய தேசங்களில் முதல் ஸ்தலம் திருவரங்கம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் திருச்சிராப்பள்ளி அருகில், காவேரி ஆற்றின் அருகே அமைந்துள்ள கோவிலினுள் தெற்கு நோக்கி படுத்தபடி அருள்பலிக்கிறார் ரெங்கநாதர்.
இவரது விமானம் : ப்ரனவாகார விமானம்
புஷ்கரணி : சந்திர புஷ்கரணி.
இவ்விடத்தில் பெருமாள் வந்ததற்கு புராணத்தில் ஒரு வரலாறு இருக்கிறது.
பாற்கடலில் நீர்குமிழிபோல் உருவான ரெங்கநாத பெருமாளை பிரம்மா தனது சத்தியலோகத்தில் வைத்து வழிபட்டு வந்தார். மறுபக்கம் சூரிய வம்சத்தில் பிறந்த இச்வாகு என்ற மன்னர் பூலோகத்தில் அயோத்தி நாட்டை ஆண்டு வந்தார்.
இந்த மன்னருக்கு சில சக்திகள் இருந்தது. அதில் ஒன்று ஆகாயமார்கமாக பயணிக்கும் சக்தி. அப்படி ஒருமுறை இவர் ஆகாயமார்கமாக பயணித்து, நேராக சத்தியலோகம் சென்று பிரம்மாவை சந்தித்தார்.
அப்போது அங்கு பிரம்மா வழிபட்டுக்கொண்டிருந்த ரெங்கநாத பெருமாளின் மேல் ஆசைக்கொண்டு பிரம்மாவிடம் அவரை தருமாறு கேட்டு, பெற்றுக்கொண்டு பூலோகத்திற்கு எடுத்து வந்து சரையூ நதிக்கரையில் ஸ்தாபித்து அதற்கு பூஜை செய்து வந்தார்.
இச்வாகு மன்னரின் வம்சாவளியில் வந்தவர் தான் இராமபிரான். அவரும் சரயூ நதிக்கரையில் இருந்த ரெங்கநாதருக்கு பூஜை செய்து ஆராதித்து வந்தார்.
இதையும் படிங்க : தோண்ட… தோண்ட…. சிவலிங்கம் : ஸ்ரீ சுயம்புநாத சுவாமி கோயில்!!
இந்த சமயத்தில் தான் ராமருக்கும் இராவணனுக்கும் யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் இராவணன் அழிந்த பிறகு தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இராமபிரான் அனைவருக்கும் பரிசுகளை அளித்தார்.
அப்போது, இராவணன் தம்பி விபீஷ்ணனுக்கு, தான் வணங்கி வந்த ரெங்கநாதரை பரிசாக அளித்தார் ராமர். விபிஷணன் மகிழ்ந்து, அதை தனது ஸ்ரீலங்கா நாட்டிற்கு எடுத்துச்சென்றான். செல்லும் வழியில் விபிஷ்ணன் சிறிது ஓய்வுக்காக ஸ்ரீரெங்கத்தில் ரெங்கநாதரை இறக்கி வைத்தான்.
அதனை பார்த்த ஸ்ரீரங்கத்தை ஆண்டு வந்த தர்மவர்மா என்ற மன்னன் விபிஷணனிடம், ”ரெங்கநாதர் எங்கள் நாட்டிலேயே இருக்கட்டும், இவரை எங்களுக்காக இங்கேயே விட்டு விடுங்கள்” என்று கேட்க, விபிஷணனோ “இது இராமர் எனக்காக பரிசளித்தது இதை நான் எவ்வாறு இங்கு விட்டு செல்வது? ” என்று அந்த மன்னனிடம் கேட்டார். இறுதியில் இருவரும் இது குறித்து ரெங்கநாதரிடத்திலேயே கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரெங்கநாதர் விபிஷிணனிடம், ”விபிஷணா.. நான் காவிரி கரையில் இருக்கவே விரும்புகிறேன். ஆனாலும், நான் உனக்கும் அருள் பாலிக்கும் படியாக இலங்கையில் இருந்து உன்னை பார்த்தபடி நான் இருக்கிறேன்” என்றார்.
அதற்கு விபிஷ்ணனும் ஒப்புக்கொண்டு, ரெங்கநாதரை அங்கேயே விட்டு சென்றான். எனவே, தான் இத்தலத்தில் ரெங்கநாதர் தெற்கு நோக்கியபடி அருள்பாலித்து கொண்டிருக்கிறர் என்கிறது புராணங்கள். .