பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார் . இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ராமதாஸ் கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான்தான் எடுப்பேன்” விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் வெளியேறலாம் என என ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பாமாவிற்குள் சலசலப்புகள் நிலவி வரும் நிலையில் ராமதாஸ் அறிவித்த முகுந்தன் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மூன்றாவது மகன் முகுந்தன் . பொறியாளரான முகுந்தன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியவர்.
கடந்த 3 மாதங்களாக பாமக கட்சிப்பணியில் உள்ளார் பாமக சமூக ஊடகப் பேரவையின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்த முகுந்தனை, இளைஞரணித் தலைவராக நியமித்துள்ளார் ராமதாஸ்
முகுந்தனை இளைஞரணித் தலைவராக நியமித்ததால் ராமதாஸ் – அன்புமணி இடையே இன்று வார்த்தை போர் நடந்த நிலையில் தற்போது சென்னை பணியூரில் உள்ள அன்புமணியின் அலுவலகத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை தந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் தந்தை – மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமாவிற்குள் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்க்கலாம்.