நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் அறிவிப்பு வர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரக்கோணம் தொகுதியில் தற்போது நடந்து வரும் உள்ளடி வேலைகளால் தி.மு.க.வினர் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த “உங்கள் தொகுதியில் ஸ்டாலினின் குரல்” என்ற கூட்டத்தின் அழைப்பிதழில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பெயர் விடுபட்டதாலும் தனக்கு முறையான அழைப்பிதழ் மாவட்ட செயலாளரிடம் இருந்து கிடைப்பதில்லை என்ற காரணத்தினால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வருவதாக தெரிகிறது.
இதன் பின்னணியை குறித்து ஆராய்ந்தால் அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி தன் மகனுக்கு அரக்கோணத்தில் சீட்டு பெற வேண்டும் என்ற காரணத்தினால் தற்போதைய அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகனை புறக்கணிப்பதாகவும் தன் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய நிர்வாகிகளையும், உள்ளாட்சி சேர்மேன்களையும் தன் மகனுக்காக விருப்ப மனு தி.மு.க தலைமையிடம் அளிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தன்னை முறையாக அழைக்காவிட்டாலும், தன் தொகுதி நிகழ்சிகளில் ஜெகத்ரட்சகன் கலந்து கொள்கிறார் என தெரிகிறது.
இதையும் படிங்க: “அட, கோரஸ் போட வச்சுட்டாரே எல்.முருகன்..!”-களைகட்டிய தாமரை மாநாடு!
ஏற்கனவே ராணிப்பேட்டை காந்தி பலமுறை முயன்று தி.மு.க தலைமையிடம் தன் மகன் வினோத்திற்காக அரக்கோணம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டபோது தி.மு.க தலைமை அதற்கு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் வினோத் உட்கட்சி விவகாரம் மற்றும் கைத்தறி துறையில் அவரது தலையீடு என தெரிகிறது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,” ராணிப்பேட்டை தொகுதியிலும், தென்காசி தொகுதியிலும் ராணிப்பேட்டை காந்தி, “பருத்திக்கு பதில் பாலிஸ்டர் பயன்படுத்தியதால் ஒரு வேட்டிக்கு 40 ரூபாய் ஊழல் கைத்தறியில் நெய்ய வேண்டிய சேலையை விசைத்தறியில் நெய்ததன் மூலம் வெட்டிக்கு 40 ரூபாய் ஊழல் என்று 1.60 கோடி வேட்டி சேலையில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக காந்தி மீது மாநில வருமான வரி துறையிடம் கைப்பட புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால், அரக்கோணம் தொகுதியில் அவருக்கு வெற்றி எளிதல்ல என்பதால தி.மு.க தலைமை அமைச்சரின் மகனுக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தன் மகன் மட்டுமே இங்கு வேட்பாளராக நிற்க வேண்டும் என வேறு யாரும் களத்தில் இல்லை என்று உறுதி செய்ய தற்போதைய ஜெகத்ரட்சகன் எம்.பி-க்கு கடும் மன உளைச்சலையும், முறையான அழைப்பிதழையும் கொடுக்காமல் இந்த தொகுதியில் வேறு யாரும் விருப்ப மனு கொடுக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவும் சென்றுள்ளது. ஏற்கனவே அமைச்சரின் மகன் வினோத் அணுகுமுறையாலும் அணுசரிப்பின்மையாலும் அதிருப்தியில் உள்ள தி.மு.க.வினர் நாம் எவ்வாறு இவருக்காக விருப்ப மனு கொடுக்க முடியும் என்றும், இதை எவ்வாறு தி.மு.க தலைமையிடம் கூறமுடியும் என்று புரியாமல் குழம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764645512404496723?s=20
கள நிலவரம் :
பா.ம.க இந்த முறை அங்கீகாரம் பெற்றே ஆக வேண்டும் என்று குறைந்தபட்சம் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது அரக்கோணம் மற்றும் தர்மபுரி தொகுதியை வெற்றிக்கான தொகுதிகளாய் குறி வைத்துள்ளது. இது குறித்து கூட்டணி கட்சிகளிடம் தெளிவாக தெரிவித்த காரணத்தினால் இந்த தொகுதியில் பா.ம.க போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்த ஏ.கே. மூர்த்தி அவர்களுக்கே இங்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதால் அவருக்கு இந்த தொகுதியில் உள்ள வன்னிய சமுதாய வாக்குகளை குறி வைக்கும் வைத்தும் ஏற்கனவே வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்ற அனுதாபம் இருப்பதாலும் அவரின் வெற்றி எளிது என பா.மா.க.வின் கணக்காக உள்ளது. இதை அறிந்து கொண்ட தி.மு.க-வோ
வன்னிய சமுதாயத்தை சார்ந்த புதுமுகம் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி தொகுதியை தக்க வைக்க திட்டம் திட்டி இருப்பதாக கூறப்படுகிறது.