அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நடத்திய போராட்டத்தில் தனது மண்டை உடைந்ததாக பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியுள்ள நிலையில் இவரது கடந்த காலம் குறித்த அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
1999 இல் ஒரு வித தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை ஒரு இந்து கும்பல் கொடூரமாக கொன்றது .
இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்திய வலதுசாரி குழுவான பஜ்ரங் தளத்தின் தலைவராக இருந்தவர் தான் இன்று பாஜக எம்.பி யாக இருக்கும் பிரதாப் சாரங்கி.
நாட்டை உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு, அந்த குழுவில் இருந்த தாரா சிங் மற்றும் 12 பேர் கடந்த 2003 இல் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது .
இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்திய குழுவின் தலைவராக இருந்த பிரதாப் சாரங்கி குறித்து ஒரிசாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் சந்தீப் சாஹு கூறுகையில் :
பிரதாப் சாரங்கி பல நேர்காணல்களை அளித்துள்ளார், அதில் அவர் “இந்தியா முழுவதையும் மாற்றுவதில் குறியாக இருக்கும்” கிறிஸ்தவ மிஷனரிகளின் “தீய வடிவமைப்பு” என்று அவர் அழைத்ததற்கு எதிராக உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
Also Read : ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!
திரு சாரங்கி, ஸ்டெயின்ஸ் மீதான தாக்குதலில் இரண்டு குழந்தைகள் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்தாலும், மதமாற்றத்திற்கு எதிரான தனது கருத்துக்களை உறுதியாகக் கடைப்பிடித்ததாகவும் அவர் கூறினார்.
பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து வலதுசாரிக் குழுக்களால் 2002 ஆம் ஆண்டு ஒரிசா மாநில சட்டமன்றத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு , கலவரம், தீ வைத்தல், தாக்குதல் மற்றும் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் .
பாஜக தலைதூக்கிய காலத்தில் இருந்து கட்சியின் முக்கிய அங்கமாக திகழும் சாரங்கி பொதுவாக தனது தொகுதியில் சைக்கிள் ஓட்டுவதை விரும்புவதாக அறியப்படுகிறார் . வாக்காளர்களைச் சந்திக்க கிராமம் கிராமமாகச் செல்கிறார். மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில், அவர் அடிக்கடி மாநில சட்டமன்றத்தில் கலந்துகொள்வதற்காக நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவதைக் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
களத்தில் இறங்கி மக்களுடன் மக்களாக பழகி அவர்களது பொன்னான ஓட்டுக்களை பெறுவதில் வல்லவர் என்று கூறப்படுகிறது என சந்தீப் சாஹு தெரிவித்துள்ளார்.
இதனை வைத்து பார்க்கும் போது இன்று நடத்த இந்த மண்டை உடைப்பு சம்பவமும் பிரதாப் சாரங்கியின் திருவிளையாடலாக இருக்குமோ என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.