Dindigul Srinivasan | பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது குறித்து திண்டுக்கல் சி.சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக ,பாஜக கூட்டணி முறிவு :
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக ,பாஜக கூட்டணி அமைத்தது.
ஆனால் தேர்தலில் திமுகவிற்கு எதிராக அதிமுக கூட்டணி பெரும்பான்மையை இழந்து தோல்வியை சந்தித்தது. இதனால் கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் வெற்றி பெற முடியவில்லை என அதிமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பனிப்போர் நிலவி வந்தது. அண்ணாவை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் அதிமுக-பாஜக இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.
இதையும் படிங்க : AIADMK PMK Alliance |உறுதியானதா அதிமுக- பா.ம.க. கூட்டணி..?தற்போதைய நிலவரம் என்ன?
இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் அதிமுக பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தற்பொழுது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது குறித்து திண்டுக்கல் சி.சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் சி.சீனிவாசன் விளக்கம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், வயலூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலப் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ,’
சமீபத்தில், டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு போதைப் பொருள் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1762750289529258277?s=20
இதில் தொடர்புடைய 3 பேரில் ஒருவர் திமுகவை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் உதயநிதி ஸ்டாலின் மனைவியுடன் சேர்ந்து திரைப்படம் எடுப்பதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நிலவுகிற காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கின்றன. இதுபற்றி எந்த அரசுகளும் கவலைப்படுவதில்லை.
இதை உணர்ந்து தான் மதவாத, மத வெறி பிடித்த கட்சியான பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது(Dindigul Srinivasan) என்றார்.
மேலும் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முக ராஜ் ,கிழக்கு ஒன்றியச் செயலாளர் அப்பன் கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.