டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் மத்திய அரசி இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் 03.10.2023 அன்று ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அன்று ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் எச்சரித்தேன். டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்று மாநில அரசே உறுதியாக உள்ள நிலையில், ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் ஆர்வம் காட்டுவது ஏன்?
Also Read : அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்..!!
நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லாதபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டியிருக்கும் போது, மாநில அரசின் ஆட்சேபனையை மீறி மத்திய அரசு ஏன் ஏலத்தை மேற்கொண்டது.
சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் நலனுக்காக, கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியதை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.