தமிழ் சினிமாவில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தில் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இதனை தொடர்ந்து ‘குஷி’ படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைய, இதையடுத்து நியூ, அன்பே ஆருயிரே, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் 2015ஆம் ஆண்டு வெளியான ‘இசை’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து அதற்கு இசையமைக்கவும் செய்தார். சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்திருந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் ரீ என்ரி கொடுத்தார்.
இன்ஹா திரைப்படத்தை தொடர்ந்து ‘ஸ்பைடர்’, மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி உள்ளிட்ட அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்தார். இதனைத் தொடர்ந்து நடிப்பில் இந்தியன் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இப்படி இயக்குனர், குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் என ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள இவருக்கு 55 வயதாகியும் இன்று திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தனது காதல் தோல்வி குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அந்த பேட்டியில் தனது காதல் கதையும், தான் இயக்கி நடித்த ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் காதல் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.
அதனால்தான் அந்த கதையை எடுத்ததாக தெரிவித்துள்ள அவர், தனது காதல் தோல்வி குறித்து அறிய வேண்டுமானால் அந்த படத்தை பார்க்கலாம் என தமாஷாக பேசினார்.
ஒரு நாள், டின்னருக்காக தனது காதலி ஏற்பாடு செய்ததாகவும் அப்போது ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததால் தனது காதலியிடம் அவசர வேலை என தெரிவித்து விட்டு கிளம்பி விட்டதாக தெரிவித்தார்.
வேலையை முடித்துவிட்டு இரவு 12 மணி அளவில் தனது காதலியின் வீட்டுக்கதவை தட்டியதாகவும் அப்போது அவர் ‘இது ஒன்றும் சத்திரம் இல்லை’ என்று கூறிவிட்டு கதவை மூடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்தின் போது மூடிய தனது இதயம், இப்போது வரை மூடப்பட்டே இருப்பதாக கூறியுள்ளார்.