கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து பெயரையும் புகழையும் பெற்றவர் வெங்கடேஷ்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது காரில் அவரும், அவரது டிரைவரும் சென்று கொண்டிருந்தபோது வழியில் காரை வழிமறித்த மர்மக்கும்பல் ட்ரைவரை அடித்து ஓட செய்துவிட்டு, வெங்கடேஷை அங்கிருந்து காருடன் கடத்தி சென்றுள்ளனர் .
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து, வெங்கடேஷை காரில் இருந்து கீழே இறக்கி கண்மூடி தனமாக அடித்து, உதைத்ததுடன் இரண்டு கால்களையும் உடைத்து உள்ளனர்.
வலிதாங்க முடியாமல் கத்திய வெங்கடேசின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தவுடன், அவரை தாக்கியவர்கள் இரண்டு உருட்டு கட்டைகளையும், ஒரு பிஜேபி கட்சியின் துண்டையும் அங்கே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்கள். இரண்டு கால்களும் உடைக்கப்பட்ட நிலையில்,படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசை மீட்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு உடனே தகவல் கொடுத்துள்ளனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெங்கடேசை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து தாக்கியவர்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களா? எதற்காக அவரை அடித்து விட்டு, அங்கே பாரதிய ஜனதா கட்சியின் கட்சி துண்டை கீழே வீசி சென்றார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் முதலில் சிக்கியவர் வெங்கடேசனின் கார் டிரைவர் மோகன் தான். காரை விட்டு இறங்கி ஓடியவர், எப்படி வெங்கடேஷ் இருக்கும் இடம் தேடி வந்தார். இது போல பல்வேறு கோணங்களில் டிரைவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக வெங்கடேசனின் காதல் மனைவி ஈடுபட்டுள்ளது, பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசனின் காதல் மனைவி மற்றும் காவல் துறையில் பணிபுரியும் மனைவியின் அக்கா மகன் ராஜ்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே டிரைவர் மோகன் மற்றும் கூலி படையினர் மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கோர தாக்குதலுக்கான காரணத்தை கேட்டபோது காதல் திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த ஐந்து வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு உள்ளது.
இந்நிலையில் வெங்கடேசனின் டிரைவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள அளவற்ற நட்பு இவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜகவை பற்றி ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருந்ததால் பாஜாகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது .
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கார் டிரைவர் மோகன் மற்றும் வெங்கடேசனின் மனைவி, அவரது அக்கா மகன் ராஜ்குமார் உடன் இணைந்து கூலிப்படையினரை ஏற்பாடு செய்து வெங்கடேசின் கால்களை உடைத்து , அந்த இடத்தில் பாஜக கொடியை வீசி சென்றால் இந்த வழக்கு வேற கோணத்தில் விசாரிக்கப்டுடம் நம் மீது சந்தேகம் வரத்து என்பதால் பக்காவாக பிளான் போட்டு இந்த நாடகத்தை நடத்தி உள்ளார்கள்.
அவர் பிளான் செய்தபடி கட்சிதமாக செய்து முடிக்க ட்ரைவர் செய்த சிறு பிழையால் இவர்களது கூட்டு சதி அம்பலம் ஆகியுள்ளது.
மக்களை மகிழ்வித்து பல பேரின் சிரிப்புக்கு காரணமாக இருந்த கலைஞர் வெங்கிடேஷின் கால்களை காதல் மனைவியே ஆள் வைத்து உடைத்தது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.