AISHE report-நாடு முழுவதும் உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாகக் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், மத்திய அரசின் அய்ஷி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’2020- 21-ல் 4.14 கோடியாக இருந்த உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை, 2021- 22ஆம் ஆண்டில், 4.33 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 2014- 15ஆம் கல்வி ஆண்டில், 3.42 கோடியாக இருந்தது. அதேபோல கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
2014- 15ஆம் ஆண்டில், 1.57 கோடியாக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, 2021- 22ஆம் கல்வி ஆண்டில், 2.07 கோடியாக அதிகரித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு
அதேபோல, 2021- 22ஆம் கல்வி ஆண்டில், தாழ்த்தப்பட்ட மாணவிகளும் அதிக அளவில் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க:Vishwa Hindu Parishad-ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்..!
அதாவது, 51 சதவீத அளவுக்கு அதிகமாக 31.71 லட்சம் மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
அதேபோல, பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 2021- 22ஆம் ஆண்டில், 6.94 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8,375 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு 8,114 கல்லூரிகளாக இருந்தது.
இங்கு ஒவ்வொரு லட்சம் மாணவ – மாணவிகளுக்கும் 30 கல்லூரிகள் அமைந்துள்ளன.
தொடர்ந்து இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 4,692 கல்லூரிகள் உள்ளன. அதேபோல கர்நாடகாவில், 4,430 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஒவ்வொரு லட்சம் மாணவ – மாணவிகளுக்கும் 66 கல்லூரிகள் அமைந்துள்ளன.
ராஜஸ்தானில், 3,934 கல்லூரிகள் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1751216269695889898?s=20
இங்கு, உயர் கல்வியைக் கற்பிக்க 2,829 கல்லூரிகள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில், 2,702 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் கலை, அறிவியல் துறையில், 1.13 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். மாணவிகளின் எண்ணிக்கையே இதில் அதிகமாக உள்ளது.
மாணவிகளின் சதவீதம் 51 ஆகவும் மாணவர்களின் சதவீதம் 49 ஆகவும் உள்ளது. அறிவியல் துறையைப் பொறுத்தவரையில், 49.18 லட்சம் மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இதிலும் மாணவிகளே அதிகமாக 50.8 சதவீதமும் மாணவர்கள் 49.2 சதவீதம் ஆகவும் உள்ளனர்.
வணிகவியல் துறையில், 44.08 லட்சம் மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், 47.2 சதவீதம் பேர் மாணவிகளாகவும், 52.8 சதவீதம் பேர் மாணவர்களாகவும் உள்ளனர். ’’.
இவ்வாறு உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education – AISHE) தெரிவித்துள்ளது.