பெண் பயணிகளுக்கென்று தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பண்டிகைகள் மற்றும் விடுமுறைக் காலம் நெருங்கி வரும் நிலையில் பெண் பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது, நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் பெண் பயணிகளுக்கு தனியாக இருக்கைகள்/படுக்கைகள் ஒதுக்கப்படும்.
இதுகுறித்த அறிவிப்பை ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். நெடுந்தூரம் பயணிக்கும் ரயில்களில் பெண்கள் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் பயணிப்பதற்காக பெண் பயணிகளுக்கென தனி சீட்டுகள் மற்றும் கூடுதல் வசதிகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதன்படி, நெடுந்தூரம் பயணிக்கும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆரு Sleeper class பெட்டிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதேபோல 3AC Class பெட்டிகளில் பெண்களுக்கு 6 பெட்டிகள் ஒதுக்கப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பெண்களுக்கு எந்த வயது வரம்பும் கிடையாது. தனியாக வந்தாலும், மற்ற பெண்களுடன் குழுவாக வந்தாலும் இந்த ஒதுக்கீட்டில் பயணிக்க முடியும்.
பெண் பயணிகள் மற்றும் அனைத்து ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த சீட் ஒதுக்கீடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்லதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுபோக, ரயிலில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சீட் ஒதுக்கீடு மாறுபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.