மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 9வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் நேற்று முன்தினம் (டிச.14) மாலை நடந்த முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளியிப்படுத்திய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கெத்து காட்டியது.
இதேபோல் நடைந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
Also Read : தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
இதையடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி நேற்று (டிச.15) இரவு நடைபெற்றது . ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா – சீனா அணிகள் மல்லுக்கட்டியது .
அனல்பறக்க நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது .
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு விளையாட்டு வீரர்கள் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.