ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட போகும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு நடந்த அரசியல் சூழல் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியாத நிலை உருவானது .
இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Also Read : விடிய விடிய படித்தேன் விடிய விடிய பால் கறந்தேன் – அண்ணாமலை உருக்கமான பேச்சு
UAE-ல் துபாய், ஷார்ஜா ஆகிய 2 இடங்களில் அக்.3 முதல் 20-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும், வங்கதேச கிரிக்கெட் வாரியமே தொடரை நடத்தும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த இந்த தொடரில் விளையாட போகும் இந்திய மகளிர் அணியை BCCI அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி பட்டியல் :
ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், எஸ் சஹாரே பாட்டீல், எஸ். சஜீவன்.